ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம்

Missing Persons Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Independent Writer Aug 09, 2024 10:26 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: H A Roshan

உங்கள் இராணுவத்தை நம்பி கையில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள்? காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள்.

நாங்கள் கேட்பது இழப்பீடுகளையோ மரணச் சான்றிதழ்களையோ அல்ல. முறையான நீதி விசாரணையே" திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்கம் கடந்தவாரம் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்த வாசகங்களே இவை.

வடக்கு கிழக்கில் ஜுலை 24,2024 தொடக்கம் ஆகஸ்ட் 01,2024 வரை எட்டு மாவட்டங்களில் இவ்வாறான பல போராட்டங்கள் நடந்தன.

இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த யுத்தம் முடிவுற்று 16 வருடங்கள் கடந்து விட்ட போதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடும்பங்கள் தினமும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக வீதியில் இறங்கி போராடியே வருகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம்..!

ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம்..!

CID விசாரணை

இவ்வாறு தனது மூன்று சகோதரர்களை இழந்து தவிப்பவர்தான் தம்பலகாமம் கோயிலடியை சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரி வயது (54) . காணாமல் ஆக்கப்பட்ட தனது சகோதரன் கந்தசாமி முரளிதரன் தொடர்பில் அவர் கூறுகையில்,

"எனது சகோதரன் 2008.05.05 ஆம் திகதியன்று சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை தேடிப் பார்த்தோம் மூன்றாம் நாள் சைக்கிள் மாத்திரம் பட்டிமேட்டில் கிடந்தது அதன் பிறகு CIDயினர் வீட்டுக்கு வந்து உடுப்பு கேட்டார்கள் வழங்கினோம் தொலைபேசியில் மாத்திரம் உரையாடுவார் எங்கிருந்து கதைப்பதாக சொல்ல மாட்டார் 9ஆம் மாதம் வரை மூன்று மாதங்கள் தொலைபேசியில் பேசியவரின் அழைப்பு பின்னர் வரவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம் | Disappearances Focus Of Presidential Candidates

இது விடயமாக போகாத இடமில்லை ஜனாதிபதி செயலகம், பொலிஸார் இடத்தில் முறைப்பாடு செய்தோம் மனித உரிமைகள் ஆணைக்குழு ஐசீஆர்சி போன்றவற்றிலும் முறையிட்டோம் சகோதர் திரும்பி வரவில்லை" என்றார்.

வடக்கு கிழக்கில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோரின் உரிமைகளுக்காக ‘வலிந்து கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோருக்கான சங்கம்’ போராடி வருகிறது.

அது மாத்திரமன்றி இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர்களுக்கான ஆணைக்குழுவையும் உருவாக்கியுள்ளதுடன் அதற்கென அலுவலகம் ஒன்றையும் நிறுவி உள்ளது.

இந்த அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடத்தில் தொடர்ச்சியாக வாக்கு மூலங்களை பெற்று வருகிறது. இவ்வாறு வாக்கு மூலம் வழங்கியவர் ஒருவர் தான் தம்பலகாமத்தை சேர்ந்த கமலினி.

"பல வாக்கு மூலங்களை ஆணைக்குழு முன்னிலையில் வழங்கியுள்ள போதிலும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. உளரீதியான பாதிப்புக்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வருகிறோம்” என தனது ஆதங்கத்தை வெளியிட்டார் அவர்.

நாங்கள் கேட்பது இழப்பீடுகளை அல்ல: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆதங்கம்

நாங்கள் கேட்பது இழப்பீடுகளை அல்ல: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆதங்கம்

காணாமல் ஆக்கப்பட்டுள்ள அலுவல தகவல்

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 1349 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ள அலுவல தகவல் அதிகாரி டபிள்யூ.ஜீ.எஸ்.சீ.சம்பத் தெரிவிக்கிறார்.

இது தொடர்பில் 585 சாட்சியமளிக்கும் அமர்வுகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம் | Disappearances Focus Of Presidential Candidates

“எனது கணவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். 2008.07.10 அன்று சுங்கான் குழிக்கு பட்டியனூர் பட்டிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

கணவர் காணாமல் போகும் போது நான் நான்கு மாத கர்ப்பிணி. இப்போது எனது மகளுக்கு 15 வயதாகிறது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தேன்.

காணாமல் போன ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தேன். எந்தவித பலனும் கிட்டவில்லை" என கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த நித்தியானந்தம் சுஜாதா வயது (54) எனும் மற்றொரு தாய் தனது கவலையை எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பலர் இவ்வாறாக குடும்ப உறவுகளை இழந்து பெரும் கவலையுடன் நாட்களை கடத்தி வருகின்றனர். தமக்கான நிரந்தர நீதியின்றி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினம்,காணாமல் போனோர் தினம், சுதந்திர தினம் என எல்லா விசேட தினங்களில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்துகின்றனர். எனினும் நீதி மட்டும் கிட்டுவதாகத் தெரியவில்லை.

தீர்வை வழங்க மறுக்கும் அரசாங்கம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு

தீர்வை வழங்க மறுக்கும் அரசாங்கம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு

காணாமல் போன உறவுகள் 

காணாமல் போன உறவுகள் பெரும்பாலானவர்கள் கணவனை இழந்த நிலையில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக மாறியுள்ளனர். இவ்வாறு குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் தனது கணவன் காணாமல் போனமை தொடர்பில எல்.தேவிகா வயது (54) தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துறார்.

"எனது கணவராகிய லிங்கேஸ்வரன் 2008.05.20 அன்று சலப்பையாறு என்ற குடியிருப்பு பகுதியில் இருந்து திருகோணமலை நகரில் உள்ள தங்க ஆபரண கடையில் வேலை செய்து வந்தார்.

வேலைக்கு சென்றவர் திரும்பிவரவில்லை. மூன்று நாட்களாக தேடினேன் காணவில்லை. இவர் காணாமல் போகும் போது மூத்த மகளின் வயது ஆறு,இளைய மகளின் வயது ஒன்றரை ஆகும்.

இது தொடர்பில் குச்சவெளி பொலிஸில் முறைப்பாடு செய்தேன். அதனைத் தொடர்ந்து ஐசிஆர்சி,மனித உரிமைகள் ஆணைக்குழு என பல முறைப்பாடுகளை செய்தும் இன்னும் என் கணவர் கிடைக்கவில்லை.

பெரும் கஷ்டத்தின் மத்தியில் பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு புலம்பெயர்ந்து தொழிலுக்காக சென்று இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து தற்போது ஒருவர் பல்கலைக்கழக கல்வியை தொடர்வதுடன் மற்றொருவர் உயர்தரத்தில் கற்று வருகிறார் தற்போது கோழி வளர்ப்பு மூலம் அன்றாட ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது" என்றார்.

இது போன்றுதான் ஏனைய குடும்பங்களும் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காக தினம் தினம் போராடி வருகின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

வயிற்றுப் பசி

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் பார்க்கின்ற அதேநேரம், தமது உறவுகளுக்காக போராட்டத்திலும் ஈடுபடவேண்டியுள்ளது.

2700 நாட்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்டியன் தேவி தெரிவிக்கையில்

ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம் | Disappearances Focus Of Presidential Candidates

"16 வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இலங்கை அரசாங்கம் தீர்வினை தரவில்லை எத்தனையோ ஆணைக்குழு வந்தும் நீதியை தரவில்லை. சர்வதேசம் ஊடாக எங்களுக்கான உரிமை நீதியை கோரி நிற்கிறோம்.

நீதி தான் தேவை நிதி தேவையில்லை. ஐக்கிய நாடுகள் சபை இதற்கான எந்தவித விசாரணை மூலமாக நீதியை தரவில்லை.

எனது மகன் 2008.03.19 அன்று அரச படையால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார் . எட்டு மாவட்டங்களில் எங்களுக்கான நீதி தேவை என்ற அடிப்படையில் போராட்டங்களை மேற்கொள்கிறோம்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (OMP) போன்றன வெறும் கண் துடைப்பே. இதனால் சர்வதேச விசாரனை தேவை என்பதே எனது கோரிக்கை" என்றார்.

சர்வதேச நீதிப் பொறிமுறை, ஆணைக்குழு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் தெரிவிக்கையில்,

"இலங்கை அரசாங்கத்தால் காணாமல் ஆக்கப்பட்ட சமவாயம் பின்னர்தான் உருவாக்கப்பட்டது.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு

சர்வதேச பொறிமுறை

இதனால் உள்ளூர் பொறிமுறையின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதில் எந்த பலனும் இல்லை.

சர்வதேச பொறி முறையானது பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் பணிக் குழுவில் ( working Group) சாட்சியங்களை முன்வைத்தாலும் அவர்களால் இலங்கை அரசாங்கத்துக்கு வெறும் பரிந்துரைகளை மாத்திரமே வழங்கலாம்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம் | Disappearances Focus Of Presidential Candidates

பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. இதே போன்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணைக்குழு என்பதும் நீதி வழங்குவதற்கான அதிகாரம் கொண்டதல்ல.

உண்மைகளை கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டதே இதன் மூலம் எந்தவித பலனும் இல்லை" என்றார்.

2022 இல் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னர் காணாமலாக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் துளிர்விட்டது.

எனினும் கடந்த இரண்டு வருடங்களில் அவர் எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வடக்கு கிழக்கிற்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ள அவர் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்கு முயற்சிக்கவுமில்லை.

தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் அரசியல்வாதிகள் தாம் ஆதரிக்கும் வேட்பாளர்களிடம் இந்த விவகாரத்தை பிரதான கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட மக்கள்

காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில்

"முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதி மற்றும் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னால் போராளிகள் உட்பட பல மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம் | Disappearances Focus Of Presidential Candidates

இதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். இதனையே எமது கட்சியான தமிழ் தேசிய மக்கள் முண்ணனியும் வலியுறுத்தி நிற்கிறது" என்றார்.

ஒட்டுமொத்தமாக சர்வதேச சமூகத்தின் சுதந்திரமான பொறி முறையை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரி நிற்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சர்வதேச சமூகம் புதிய பொறிமுறைகள் ஊடாக நீதியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இந்த மக்கள் போராடி வருகின்றனர்.

நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சலுகைகளுக்காக தாரை வார்க்காது காணாமல்போனார் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து நீதியைப் பெறுவதற்கான அழுத்தங்களை வழங்க பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் வேணவாவாகும். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US