போதைப்பொருள் காணாமல் போன சம்பவம்: நீதிமன்ற அலுவலரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி
பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் சாட்சிய அறைக்கு பொறுப்பான பாதுகாவலரை, விசாரணைக்காக தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று(30) அனுமதி வழங்கியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
முன்னதாக, 240 மில்லியன் ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பிரதம நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri