ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கருத்து முரண்பாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார(Ranjith Madduma Bandara) தலைமையில் நடைபெற்ற, வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் போது கட்சி உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தலைமையில் குறித்த கூட்டம் இன்று (02.11) நடைபெற்றுள்ளது.
இதன்போது, கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டது.
அக் கட்சியின் வவுனியா மாவட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தாம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்திக்காகச் செயற்படுகின்ற போதும் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், திட்டமிட்டு தம்மை தற்போது கட்சியின் மாவட்ட பதவிகளில் உள்ளோர் ஓரங்கட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.
கட்சியினால் தமக்கு எந்த விடயங்களும் அறிவிக்கப்படுவதில்லை எனவும், கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் எந்தவித செயற்பாடுகளும் முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
பிறிதொரு ஆதரவாளர், கட்சியின் பெயரால் மக்களிடம் பணம் பெற்றவர்களே கட்சியில் இருந்து ஒதுக்கி இருப்பதாகவும், திட்டமிட்டு எவரையும் கட்சி ஓரங்கட்டவில்லை எனவும் தெரிவித்ததுடன், கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது பிறிதொரு உறுப்பினர், ஊடகங்கள் முன் எமது கட்சி பிரச்சனையைக் கதைத்து அதனைப் பெரிதாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். வேறு பல உறுப்பினர்களும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்ததையடுத்து கருத்தறியும் செயற்பாடு நிறுத்தப்பட்டு கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார உரையாற்றியிருந்தார்.
இதன், கட்சி உறுப்பினர் சிலரை தனித்தனியாகச்
சந்தித்துப் பேசியிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஏரான் விக்கிரமரட்ண, புத்திக பத்திரண மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்
உமா சந்திர பிரகாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.




ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri