மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் போட்டிகள்.. பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கருத்து
கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக் கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கலந்துகொண்டு பார்வையற்றோர் கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கிரிக்கெட் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு என்றும், அதில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிடக் கூடாது என்றும், இவ்விளையாட்டு தடைகளை உடைத்து அனைவரையும் உள்ளடக்க உதவுகிறது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
பார்வையற்றோரின் திறமை
அத்துடன் பந்து இயக்கத்தைக் கண்காணிக்க உதவும் சத்தத்தை எழுப்பும் கடினமான பிளாஸ்டிக் பந்துகள் மற்றும் ஒலி எழுப்பும் எஃகு விக்கெட்டுகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இதேவேளை பந்துவீச்சு அண்டர்ஆர்ம் (Underarm) முறையில் செய்யப்படுகிறது.

இதற்கமைய முற்றிலும் பார்வையற்றவர்கள் (இவர்கள் எடுக்கும் ஒட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்). மிகவும் குறைந்த பார்வை கொண்டவர்கள்.
அதிக பார்வை வசதியும் குறைந்த தெளிவும் கொண்டவர்கள் என 11 பேர் கொண்ட அணியில் 3 B1, 4 B2 மற்றும் 4 B3 வீரர்கள் இடம்பெறுவர்.
மேலும் வீரர்களின் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் வியப்பளிப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர், இலங்கையின் முதல் பார்வையற்ற பாராளுமன்ற உறுப்பினரான சுகத் வசந்தா போன்றவர்கள் கொள்கை மாற்றங்களுக்கும் சமூக உள்ளடக்குதலுக்கும் ஆற்றிவரும் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri