சம்மாந்துறை வலயத்திற்கு நியமிக்கப்பட்ட தமிழ் கல்வி பணிப்பாளர்: வெளியான எதிர்ப்பு
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளராக எம்.மகேந்திரகுமார் பதவியேற்றுக்கொண்டார்.
நேற்று காலை வலய கல்வி அலுவலகத்திற்கு சென்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று காலை அவர் பதவியை பொறுப்பேற்க சென்ற வேளையில் அங்குவந்த முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.ஐ.எம்.மன்சூர் முஸ்லிம் வலயத்திற்கு தமிழர் ஒருவரை நியமித்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்
அத்துடன் இது நீடிக்காது நீடிக்காது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வலையத்தில் முஸ்லிம்களின் கலாசாரம் தெரிந்த முஸ்லிம் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது அங்கு நின்று சத்தமிட்டுள்ளார்.
அங்குவந்த சம்மாந்துறை பொலிஸார் அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் செயற்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக மகேந்திகுமார் நியமிக்கப்பட்டுள்ளதுக்கு சம்மாந்துறை பகுதியை சேர்ந்த பல்வேறு முஸ்லிம் புத்திஜீவிகளும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
இனமுரண்பாடுகளை தவிர்த்து சிறந்த அதிகாரிகளை வரவேற்போம் என்ற வகையில் கருத்துகளை முகநூல்களில் பகிர்ந்துவருவதை காணமுடிகின்றது.
இதேநேரம் சில முஸ்லிம் ஊடகவியலாளர்களும் இந்த நியமனத்திற்கு எதிராக இனவாத ரீதியான கருத்துகளை முகநூல்களில் எழுதிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை கல்வி வலயமானது முஸ்லிம் -தமிழ் பாடசாலைகளைக்கொண்ட கல்வி வலயமாக காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |