அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட் கிழமை அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓய்வு பெற்ற மேஜனர் ஜெனரல் சுரேஸ் சாலேயின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுரேஸ் சாலே ஓய்வு
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே நேற்றையதினம் முதல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் இணைப்பாளர் ஆசாத் மௌலானாவை கோடிட்டு, சுரேஸ் சாலே மீது குற்றம் சுமத்தியிருந்தது.
எனினும் அதனை சுரேஸ் சாலே மறுத்திருந்தார்.
அத்துடன் அந்த ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சுரேஸ் சாலே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்கத்கது.