சற்றுமுன்னர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் உடலம்..! நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள முதலமைச்சர் விஜய்
புதிய இணைப்பு
சற்றுமுன்னர் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள இயக்குநர் பாக்கியராஜின் வீட்டிற்கு அவரது உடலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
இன்று(27.06.2026) பிற்பகல் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள இயக்குநர் பாக்கியராஜ் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவிக்கவுள்ளதாகவும், தற்போது பாக்கியராஜ் உடலத்தை காண்பதற்கான அமைச்சர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு
இயக்குநர் பாக்கியராஜ் வீட்டிற்கு ஊடகங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தர ஆரம்பித்து விட்ட நிலையில், அவரின் உடலத்தை வள்ளுவர் கோட்டம் - சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைப்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
முதலாம் இணைப்பு
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று(27.06.2026) காலமானார்.
இவருடைய இறப்பிற்கு மாரடைப்பு தான் காரணம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 73 வயதாகும் பாக்கியராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாக்கியராஜ் இன்று(27) வழக்கம் போன்று நடைபயிற்சி சென்று, வீடு திரும்பிய வேளையில் நெஞ்சு வலிக் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் நேற்று(26) கோவாவில் திருமண நிகழ்வொன்றில் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் நடிகை சுபாசினி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO