இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
கொழும்பு மற்றும் கஜகஸ்தானுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இருநாடுகளுக்குமிடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விமானம் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ( (BIA) வந்தடைந்த போது சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் தொலைந்த மோட்டார் சைக்கிள் 14 ஆண்டுகளுக்கு பின் மீட்பு: உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை
நேரடி விமான சேவை
165 சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் வந்திறங்கிய விமானத்தை இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) நிறுவனம் நீர் தாரை வரவேற்பளித்துள்ளது.
அத்துடன், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விமான குழுவினரையும் சுற்றுலா பயணிகளையும் வரவேற்க பாரம்பரிய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில், ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகளை இயக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.