இலங்கையிலிருந்து மீண்டும் நேரடி விமான சேவை! - கல்ஃப் எயார் அறிவிப்பு
பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் எயார், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மீண்டும் நேரடி சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி முதல் வாராந்தம் இரண்டு விமானங்களை சேவையில் ஈடுபட்டுத்தவுள்ளதாக கல்ஃப் எயார் அறிவித்துள்ளது.
கல்ஃப் எயார் 1981 முதல் பஹ்ரைன் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகளை முன்னெடுத்துள்ளது.
அபுதாபி, துபாய், குவைத், ரியாத், ஜித்தா, தம்மாம், மதீனா, மஸ்கட், கெய்ரோ, அம்மன், காசாபிளாங்கா, லண்டன், பாரிஸ், பிராங்பேர்ட், ஏதென்ஸ், பேங்காக், மணிலா, டாக்கா, அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல இடங்களுக்கு கல்ஃப் எயார் சேவைகளை முன்னெடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஒருபோதும் பறப்பதை நிறுத்தாத சில விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய கல்ஃப் எயார், அதன் வலையமைப்பு முழுவதும் உள்ள அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan