காற்பந்து உலகில் அதிர்ச்சி : திருமணமான 10 நாட்களில் உயிரிழந்த காற்பந்து வீரர்
லிவர்பூல் கிளப் மற்றும் போர்த்துக்கல் அணியின் முன்கள கால்பந்து வீரரான டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் டியோகோ மற்றும் 26 வயதான அவரது சகோதரர் ஆண்ட்ரே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
காற்பந்து வாழ்க்கையை...
விபத்தில் உயிரிழந்த ஜோட்டாவிற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ஜோட்டாவின் மறைவு காற்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது காற்பந்து வாழ்க்கையை பாசோஸ் டி ஃபெரெய்ரா கழகத்தில் தொடங்கிய ஜோட்டா, பின்னர் 2016இல் அத்லெட்டிகோ மாட்ரிட் கழகத்தில் சேர்ந்தார்.
போர்த்துக்கல் அணிக்காக
2016இல் எஃப்சி போர்டோவிலும், 2017இல் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் (வோல்வ்ஸ்) அணியிலும் தற்காலிகமாக விளையாடினார்.

2018இல் வோல்வ்ஸ் அணியில் நிரந்தரமாக இணைந்து, 131 போட்டிகளில் 44 கோல்கள் அடித்தார்.
தொடர்ந்து 2020இல் லிவர்பூல் கழகத்திற்காகவும் போர்த்துக்கல் தேசிய அணிக்காக 49 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri