தோண்டி எடுக்கப்படவுள்ள தினேஷ் ஷாப்டரின் சடலம் - செய்திகளின் தொகுப்பு
படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் உடல், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று (25.05.2023) காலை 8.30 மணிக்கு 5 பேர் கொண்ட மருத்துவகுழு முன்னிலையில் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
இதன்போது குற்றப் புலனாய்வு அதிகாரிகள், கைரேகை அதிகாரிகள், ஷாப்டரின் உறவினர்கள், அவரது சடலத்தை அடையாளம் கண்டவர்கள், மலர்சாலை முகாமையாளர், தலைமை தடயவியல் மருத்துவ அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரும் இவ்விடத்தில் பிரசன்னமாகி இருப்பார்கள் என தெரியவருகின்றது.
மேலும், ஷாப்டரின் சடலத்தை தோண்டியெடுப்பதற்காக இன்று பொரளை மயானத்துக்கு வருமாறு, ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த 22ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
