பிரபல தமிழ் வர்த்தகர் படுகொலை: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் உடல் பாகங்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தடயங்களை DNA பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
DNA பரிசோதனை
இதன்படி, இரத்த மாதிரிகள், நகங்கள், உடல் பாகங்கள் மற்றும் சில தடயங்கள் தொடர்பான DNA பரிசோதனையை அரசாங்க பகுப்பாய்வாளர் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை திருப்புமுனை எதுவும் ஏற்படாத போதிலும் முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என்பது போல தகவல்கள் வெளியில் கசியவிடப்படுகின்றன என பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.
வர்த்தகர் தினேஷ் சாப்டர் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த விபரங்களை ஊடகங்களிற்கு தெரியப்படுத்த வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் விசாரணை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
