தினேஷ் ஷாப்டர் வழக்கில் புதிய திருப்பம்! மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சடலத்தை தோண்டியெடுக்க கோரிக்கை
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபை நேற்று (18.05.2023) கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு உயிரிழந்தவரின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபையின் இந்தக் கோரிக்கை தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் உத்தரவு பிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திகதி நிர்ணயம்
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர் மீண்டும் வழக்கு விசாரணையை தொடர நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதனை தொடர்ந்து தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam