தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் வெளியிடப்பட வேண்டிய அனைத்து DNA அறிக்கைகள் மற்றும் தொலைபேசி தரவு பதிவுகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (27.06.2023) அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்ட தகவல்
இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளின் பகுப்பாய்வு நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தொலைபேசி மூலம் அறிவித்துள்ள நிலையில், அறிக்கைகளை வரவழைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, உரிய பகுப்பாய்வு அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க இரசாயனையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |