படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் காரில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்த மாதிரி! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
காரில் காணப்பட்ட இரத்த மாதிரி
இந்நிலையில், தினேஷ் சாப்டரின் காரில் காணப்பட்ட இரத்த மாதிரி யாருடையது என்பதனை அறிந்துக்கொள்வதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் சிலரின் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இனுடைய உத்தரவிற்கு அமைய தினேஷ் சாப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடமையாற்றிய 10 பேரிடம் இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மேலும் இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
