பிரபல தொழிலதிபர் படுகொலை! இங்கிலாந்து தப்பிச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் கசிந்துள்ள தகவல்
பிரபல தொழிலதிபர் தினேஷ் சாப்டர் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளோடு தொடர்புடைய 42 சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவிக்கையில், படுகொலை விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவரது கையடக்க தொலைபேசி உட்பட பல கையடக்க தொலைபேசிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குறுந்தகவல்கள் தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
படுகொலை செய்யப்பட்டுள்ள தினேஷ் சாப்டர், மொடல் பாம் பகுதியில் நிறைவேற்று அதிகாரியின் கையடக்கத் தொலைபேசிக்கு அவர் லொகேஷன் போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் தினேஷ் சாப்டர் படுகொலை செய்யப்பட்டுள்ள தினத்தில் இரவு 08.15 மணியளவில் அவரது மனைவியுடன் அவர் இங்கிலாந்து தப்பிச் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிற்பகல் 4 மணிக்கு செல்வதற்கு தயாராக இருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam