தினேஸ் ஷாப்டரின் மரணவிசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு
வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகள் தொடர்பான அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(20.06.2023) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னர் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பல இரத்த மாதிரிகள் உட்பட வழக்குத் தயாரிப்புகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய குறிப்பிட்டார்.
எனவே அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் இருந்து இந்த அறிக்கைகளைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
தினேஸ் ஷாஃப்டரின் மரணத்தில் சர்ச்சை
இதற்கிடையில், தேவைப்பட்டால், இந்த அறிக்கைகள் குறித்து அரசாங்க பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மேலதிக நீதவான் தெரிவித்துள்ளார்.
தினேஸ் ஷாப்டரின் மரணத்தில் சர்ச்சை தொடரும் நிலையில், மரணத்திற்கான காரணத்தை அறிய புதியதொரு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு முன்னிலையில் சமீபத்தில் தோண்டியெடுக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you my like this video