ஷாப்டரின் தொலைபேசியை உறவினர்களிடம் கையளிக்க அனுமதி மறுப்பு
மர்மமான முறையில் உயிரிழந்த ஜனசக்தி குழும பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியை உறவினர்களிடம் கையளிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை அவர்களது உறவினர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்க தடயவியல் பரிசோதகர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை
சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த ஆட்சேபணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் உறவினர்களிடம் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை வழங்கிய பின்னர், அவர்கள் இணையத்துடன் இணைக்கும் போது அதில் உள்ள தரவுகள் அழிக்கப்படலாம் எனவும், தொலைபேசி மற்றும் சிம் கார்டு தொடர்பான விசாரணைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அத்துடன் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |