அமைச்சர் ஒருவரின் செயற்பாடு காரணமாக உச்சகட்ட கடுப்பில் கோட்டாபய
அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் செயற்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபத்திற்கு உள்ளானதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற வேளையில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காமினி லொக்குகே மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சென்றுள்ளார்.
அவசர கூட்டம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ள நிலையில் அவர் திரும்பி வரும் போது எஸ்.பீ.திஸாநாயக்க மாத்திரமே இருந்துள்ளார். அங்கிருந்த தினேஷ் குணவர்தன காணாமல் போயுள்ளார்.
தினேஷ் குணவர்த்தனவின் செயற்பாடு காரணமாக அவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்ட கைத்தொழில் அமைச்சு பதவி அவருக்கு கிடைக்காமல் போயுள்ளது.
அதற்கமைய தினேஷ் குணவர்தன அங்கிருக்காமையினால் தொழில் அமைச்சு எஸ்.பீ.திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
