டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து திமுத் கருணாரத்ன விலகுகிறார்!
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்குப் பின்னர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன (Dimuth Karunaratna) தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் (Wellington) முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் இன்றைய தினம் (20.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தனது தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அடுத்த மாதம் இலங்கை நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
