உலக பௌத்த அறிஞர்கள் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் ரில்வின் சில்வா சந்திப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, பிரபல இந்திய நடிகரும் பௌத்த ஆர்வலருமான ககன் மலிக் உட்பட உலக பௌத்த அறிஞர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(27.10.2026) மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ‘புத்தவனம் திட்டத்தின் சிறப்பு அதிகாரி பேராசிரியர் மல்லேபல்லி லட்சுமையா தலைமையில் இந்தப் பிரதிநிதிகள் குழு வருகை தந்திருந்தது.
கூட்டு ஒத்துழைப்பு
இந்த சந்திப்பின் போது பௌத்த மரபுகளைப் பாதுகாத்தல், பௌத்த கலாசாரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார மற்றும் ஆன்மீகத் தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் நட்புறவை வளர்ப்பதற்கான கூட்டு ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam