நிசங்க சேனாதிபதியிடம் 2 பில்லியன் கோரும் தில்ருக்ஷி விக்ரமசிங்க
இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதிப் சொலிசிட்டர் ஜெனரலுமான தில்ருக்ஷி விக்ரமசிங்க மற்றும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையில் நடந்த தொலைபேசி உரையாடல் தொகுக்கப்பட்டது என்பதை நிர்வாக மேன்முறையீட்டு நீதிச் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் காரணமாக தில்ருக்ஷி பணி இடைநீக்கப்பட்டதுடன் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பணி இடைநீக்கப்பட்டதை இரத்துச் செய்யுமாறு நீதிச் சபை உத்தரவிட்டுள்ளதுடன் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.
இதனிடையே குரல் பதிவு சம்பவம் காரணமாக தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உடனடியாக 2 பில்லியன் ரூபாயை இழப்பீடாக செலுத்துமாறு கோரி தில்ருக்ஷி விக்ரமசிங்க, நிசங்க சேனாதிபதிக்கு சட்டத்தரணி ஊடாக அறிவிப்பணை அனுப்பியுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
