அனுரவிற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க சவால்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு, பிரபல வர்த்தகரும் மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
முடிந்தால் தம்முடன் பகிரங்க நேரலை விவாதம் ஒன்றை நடாத்துமாறு கோரியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான வாக்குறுதி
திருடர்களை பிடித்து அவர்களின் பணத்தை மக்களிடம் ஒப்படைப்பதாகவும், சர்வதேச பிணைப் முறிப் பத்திரங்களுக்கு பணம் செலுத்தப் போவதில்லை எனவும் அனுரகுமார பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் அனைத்துமே ஒரே விதமான கொள்கைகளை பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விரும்பியவாறு வரி அறவிடுகின்றது
இதன் காரணமாகவே அரசாங்கம் விரும்பியவாறு வரி அறவீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
அன்று வாரத்திற்கு இரண்டு தடவைகள் கொழும்பில் போராட்டம் நடத்திய ஜே.வி.பி கட்சியினர் தற்பொழுது மௌனம் காத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |