இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டின் தலைவர் சஜித் - திலிப் வெதாரச்சி
இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) என நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாரச்சி (Dilip Wedaarachchi) தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை நகரில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இன்று நாட்டு மக்களினால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்த அரசாங்கம் தற்பொழுது செய்வதறியாது தவிக்கின்றது. மீண்டும் ஒரு தடவை இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம்.
மக்களினால் வெறுக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை மாற்றியமைக்கக் கூடிய ஆற்றல் சஜித் பிரேமதாசவிற்கு மட்டுமே உண்டு.
எனவே இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டின் ஜனாதிபதி சஜித் பிரேமதாசவே என திலிப் வெதாராச்சி தெரிவித்துள்ளார்.
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam