திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்தலாம்! கடும் தொனியில் சரத்வீரசேகர மிரட்டல்
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இனமோதலுக்கு வழி வகுத்து இரத்தக்களரியை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
வடக்கில் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மாவட்ட நீதி மன்றங்களில் பொலிஸார் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி
எனினும் வடக்கில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளன. வடக்கு நீதிமன்றங்கள் இப்படியான கட்டளைகளைத்தான் வழங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
எனினும் பொலிஸார் தமது கடமைகளை உரிய வகையில் செய்து வருகின்றனர். வடக்கிலும்,கிழக்கிலும் பொலிஸாருக்குச் சவால் விடும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். அவர்களைத் திருத்தவே முடியாது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இன மோதலுக்கு வழிவகுத்து இரத்தக்களரியை ஏற்ப டுத்தும் என்பதைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். எனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் , நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் சுயாதீன விசாரணைகளை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் தேவையேற்படின் சர்வதேச விசாரணையை நாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri