மதுபான உரிமங்கள் சர்ச்சையில் கு. திலீபன் மீதும் குற்றச்சாட்டு: தொடரும் சர்ச்சை
மதுபான உரிமங்கள் தொடர்பில் தவறான செய்தியை பிரசுரித்ததாக பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
இணையவழி பத்திரிகை ஒன்றில் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மதுபான நிலைய அனுமதிப் பத்திரங்களை பெற்று கைமாற்றியதாக ஒரு செய்தி ஒன்று வெளிவந்திருந்தது.
இது தொடர்பாக அவரது அலுவலகத்தில் நேற்று (01.10.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனுமதிப் பத்திரம்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
''இணையவழி பத்திரிகை ஒன்றில் எனது பெயரை பயன்படுத்தி இரண்டு மதுபானநிலைய அனுமதிப் பத்திரத்தினை நான் பெற்றதாகவும் அதனை வேறொருவருக்கு மாற்றியதாகவும் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது உண்மையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்ப்படுத்தக்கூடிய வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து முறையிட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸ்நிலையத்திலும் முறையிட்டுள்ளேன்.
உடனடியாக குறித்த பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் அந்த செய்தியாளர் இருவரையும் அழைத்து விசாரிப்பதாகவும் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |