புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் மாயமான கிழக்கு எம்.பிக்கள்: லவக்குமார் குற்றச்சாட்டு
கிழக்கை மீட்கப் போகின்றோம், அபிவிருத்தியை செய்யப்போகின்றோம் என்றவர்கள் இன்று புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் ஒழித்து திரிகின்றனர் என சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சுயேடட்சைக்குழுவாக போட்டியிடுவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (1) தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மாற்றத்தை நோக்கிய பயணம்
“தமிழினத்துக்காகவும் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காகவும் மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
கடந்த கால அரசியல் பயணங்களை பார்க்கின்றபோது பலவிதமானவர்கள் பலவித அரசியல்
கோணங்களிலே பயணித்தனர்.
ஏங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்பி பலவிதமான தடைகள் எதிர்ப்புக்கு மத்தியிலே இலங்கை அரசையும் எதிர்த்து நாங்கள் போராடி எமது மக்களின் நீதிக்கான பயணத்தை நடாத்தவேண்டிய காலம் மாறவேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 6 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
