இலங்கையர்களுக்காக அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையர்கள் பயன்படுத்தும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
"நாட்டின் குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை.
டிஜிட்டல் அடையாள அட்டை
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ள குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு வேறு எந்த தரப்பினருக்கும் அனுப்பப்படாத உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயலாக்கப்படும்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர் தரத்துடன் கூடிய அடையாள அட்டையாக இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
