நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் சுகாதார அட்டை! சுகாதார அமைச்சின் அறிவிப்பு
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட தனிநபர்களுக்கான டிஜிட்டல் அட்டை வழங்கும் செயற்பாடுகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது குறித்த அறிவித்தலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
செப்டெம்பர் முதல் வாரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 161,650 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரை (நேற்றிரவு) 5,949,431 இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri