அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப டிஜிட்டல் அட்டை
அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்த ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் தேவைக்கேற்ப (இணையம்) வங்கி முறை மூலம் தொடர்புடைய நிதியை திருப்பிச்செலுத்தவும், தனிப்பட்ட தலையீட்டை குறைத்து அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுடன் எரிபொருளை வாங்கவும் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் முறை
தற்போது, இலங்கை வங்கியும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து டிஜிட்டல் அட்டைகள் மூலம் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான மேற்படி முறையை ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் வெற்றியின் அடிப்படையில், ஏனைய அரசு நிறுவனங்களுக்கும் அதே முறையை செயல்படுத்தவும் ஜனாதிபதி இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 1 மணி நேரம் முன்
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri