SLIM Digis 2.5 இல் Digibrush வரலாறுச் சாதனை
இவ்வாண்டு 450க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் மிகுந்த போட்டித் தன்மை கொண்ட SLIM Digis 2.5 விருதுகளில், Digibrush மொத்தம் 24 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இதில், மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாகவும், கிராண்ட் பிரிக்ஸ் வென்ற ஒரே நிறுவனமாக Digibrush தனது முன்னணித் தலைமையை உறுதிப்படுத்தியது.
மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக
இந்த வெற்றிகளில் 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் பல்வேறு பிரிவு விருதுகள் அடங்கும்.

சந்தைப்படுத்தல், மின் வணிகம், செயல்திறன் மார்க்கெட்டிங், சமூக ஊடக ஒருங்கிணைப்பு, குறுக்கு ஊடக ஒருங்கிணைப்பு போன்ற பிரிவுகளில் Emerald, Hutch, Jesta, Keells, Harris by JAT, Milady போன்ற பிராண்டுகளுக்காக பெற்ற வெற்றிகள், Digibrush இன் பன்முக திறனைக் காட்டுகின்றன.
இணை நிறுவனர் ஹிஷாம் சுல்ஃபிகர் கருத்து தெரிவித்ததாவது: “மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகவும், மொத்தம் நான்கு முறையாகவும் கிராண்ட் பிரிக்ஸ் வென்றது எங்கள் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகும்.
விருதுகளை வெல்ல மட்டுமல்லாமல், பிராண்டுகளுக்கும் நுகர்வோருக்கும் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் வேலையில்தான் எங்கள் கவனம் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் வியாபாரத் துறையில்
இணை நிறுவனர் ஃபசால் நௌஃபர் மேலும் கூறியதாவது: “விருதுகள் வந்து போகும், ஆனால் அர்த்தமுள்ள படைப்புகளை தொடர்ந்து உருவாக்கும் உந்துதல்தான் எங்களை முன்னேற்றுகிறது.
இந்த வெற்றிகள், எவ்வளவு தூரம் வந்துள்ளோம், இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை நினைவூட்டுகின்றன.” எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிகவும் விருது பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக மாறிய Digibrush, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது.
Häagen-Dazs, Nature Valley, Old El Paso போன்ற உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளுடன் General Mills வழியாக இணைந்து பணிபுரிவது, இலங்கைக்கு அப்பாலும் அதன் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது.
24 விருதுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க 4 கிராண்ட் பிரிக்ஸ் வெற்றிகளுடன், Digibrush டிஜிட்டல் வியாபாரத் துறையில் தனது தலைமைத்துவத்தையும் எதிர்காலத்தை வடிவமைக்கும் வல்லமைக்கும் உறுதியளித்துள்ளது.