80 வீதத்தால் ஒமிக்ரோன்' அதிகரிப்பு! கட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றின் விகிதம் அதிகரித்துள்ளமையை காணமுடிவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இறுதியாக கிடைத்த தகவல்களின்படி கண்டறியப்பட்ட கொரோனாவை வரிசைப்படுத்தும்போது 100க்கு 80வீதமான தொற்றுக்கள் ஒமிக்ரோன் தொற்றுக்களாக கண்டறியப்பட்டுள்ளதாக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்களில் 180 தொற்றுக்கள் வரிசைப்படுத்தப்பட்டபோது அதில் 160 தொற்றுக்கள் ஒமிக்ரோன் என்று கண்டறியப்பட்டுள்ளன.
எனவே இதனைக்கொண்டு ஒமிக்ரோனின் பரவல் 100க்கு 80வீதம் என்று கூறலாம் என்று ஹேமந்த ஹேரத் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
பண்டிகை காலத்தின் பின்னர், நாட்டில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகரி்க்கலாம் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படி கொரோனா தொற்றுக்கள் ஒரேயடியாக அதிகரிக்குமானால் அது கட்டுப்படுத்தமுடியாத நிலைக்கு சென்று விடும்.
எனவே சுகாார வழிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதே கொரோனா பரவலை தடுக்கக்கூடிய ஒரு வழியாகும் என்று ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
இதேவேளை ஒமிக்ரோன் உட்பட்ட கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், செலுத்தப்பட்டு வரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 160ஆயிரம் பேர் வரை மூன்றாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இதற்கமைய இதுவரை காலத்தில் 45லட்சம் பேர் அதாவது சனத்தொகையில் 30வீதமானோர் மூன்றாம் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்று ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
இதில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 52 வீதமானோர் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam