சர்வதேச ரீதியில் சிலம்பாட்டத்தில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கௌரவிப்பு
இந்த வருடம் இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற சர்வதேச ரீதியிலான சிலம்பாட்ட போட்டியில் சாதனை படைத்த இனியவாழ்வு இல்ல மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில், உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
குறித்த போட்டியில் புதுக்குடியிருப்பு இனியவாழ்வு இல்லத்தினை சேர்ந்த 26 மாற்றுதிறனாளி மாணவர்கள் பங்குபற்றி 13 தங்கபதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 4 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.
மேலதிக மாவட்ட செயலாளர்
அதேவேளை, நிகழ்வின் பிரதம விருந்தினராக மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் இனிய வாழ்வு இல்லத்தின் முகாமையாளர் எஸ். ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலதிக தகவல் : அ. ராயூகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |