சிறுவர்களுக்கு தடுப்பூசி எற்றுவது குறித்து அரசாங்கத்திற்குள் மாறுபட்ட கருத்து
சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து அரசாங்கத்திற்குள் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றது. சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது பொருத்தமில்லை என்ற வகையில் நேற்றைய தினம் ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே(Sudharshani Fernandopulle) தெரிவித்திருந்தார்.
கோவிட் நோய்த் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை விடவும் தடுப்பூசி ஏற்றுகையினால் சிறார்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என தெரிவித்திருந்தார்.
எனினும், சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது பொருத்தமானது என அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன(Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களுக்கு உலகம் முழுவதிலும் தற்பொழுது தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.  
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        