இலங்கை வந்தடையவுள்ள டீசல் தாங்கிய கப்பல்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக 28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று பிற்பகல் நாட்டுக்கு வந்துசேரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினமும் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டினை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு இரு கப்பலூடாகவும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ள டீசலை இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த ஓரிரு தினங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்துள்ளது.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
