டீசல் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட விபரீதம்: பரிதாபமாக பலியான இளம் உயிர்
டீசல் எண்ணெய் குழாய் மீது பயணித்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - நவகமுவ வைத்தியசாலை வீதியில் வசிக்கும் முப்பது வயதுடைய இட்டமல்கொட தசநாயக்கவைச் சேர்ந்த ஜனித் சாருகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (07) காலை 6.30 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்த போது, கீழ் பொமிரிய பகுதியில் வீதியில் இருந்த எண்ணெய்க்குழாய் தட்டு வழுக்கி வீதியில் விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை
இதன் பின்னர் நவகமுவ அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது இந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
நவகமுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பி.ஓ.பி. லயனல் சேனநாயக்க அவர்களின் ஆலோசனையின் பேரில் போக்குவரத்துப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யூ.ஓ.பி. சந்திரசேன, PO (51887) நிஹால், PO (56992) ரோஹிதா, போ. எஸ்.ஏ (44861) பண்டார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam