இத்தாலியில் டீசலின் விலை 552 ரூபாய்:ரோஹித்த அபேகுணவர்தன
இத்தாலியில் ஒரு லீற்றர் டீசலின் விலை 2.20 யூரோ எனவும் அது இலங்கையின் ரூபாய் பெறுமதியில் 552 ரூபாய் எனவும் அந்த நாட்டில் ஒரு லீற்றர் பெட்ரோல் 2.22 யூரோ எனவும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எரிசக்தி மற்றும் மின் சக்தி நெருக்கடி தொடர்பான விவாதத்தில் அவர இதனை கூறியுள்ளார். இதனடிப்படையில் பார்க்கும் போது இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளை விட பாதி விலைக்கு இலங்கை எரிபொருள் விற்கப்படுகிறது. இந்தளவுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்குவது தொடர்பில் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.
கொரோனா தொற்று நோயுடன் முழு உலகமும் எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri