கந்தளாயில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 லீட்டர் டீசல் பறிமுதல்: ஒருவர் கைது
கந்தளாயில் விற்பனைக்காக சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 லீட்டருக்கும் அதிகமான டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கித்துளுத்து பகுதியில் இன்றைய தினம் (24.03.2026) இடம்பெற்றுள்ளது.
டீசலை பொலிஸார் கடையொன்றிலிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
சூரியபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கந்தளாய் அக்போபுர பொலிஸாருடன் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபர் கைது
இதன்போது, விற்பனைக்குத் தயாராக இருந்த 100 லீட்டருக்கும் அதிகமான டீசல் கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பாக ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட டீசல் அடங்கிய எரிபொருள் கொள்கலன்களையும் இன்று கந்தளாய் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam