யாழில் முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறீஸ்கந்தராசா தவரூபி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு திருமணமாகாத நிலையில் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மன விரக்தியில் இன்று மதியம் உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டி உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
