யாழில் மதுபான போத்தலினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி!
யாழில் மதுபான போத்தலால் தலையில் தாக்கப்பட்டதால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நேற்றையதினம்(3.5.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது அதேபகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தையிட்டிப் பிரதேசக் காணி விடுவிப்பை சிலர் அரசியல் ரீதியாகக் குழப்புகின்றனர்:இளங்குமரன் எம்.பி விசனம்
தாக்குதல்
நேற்று இரவு நண்பர்கள் அனைவரும் புதுமைமாதா ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மது அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மதுபான போத்தலினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போது அவர் உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணை
தாக்குதலை மேற்கொண்ட அதே இடத்தைச் சேர்ந்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதுடன் விசாரணையின் பின்னர் அவரை யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026