வயலுக்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி
வவுனியா - வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட குளவிசுட்டான் குறிசுட்ட குளம் பகுதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(15.08.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர், குறிசுட்டகுளம் பகுதியில் உள்ள வயல் நிலத்தினை பார்வையிட சென்ற போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
இவ்வாறு உயிரிழந்தவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய குளவிசுட்டான் நெடுங்கேணியினை சேர்ந்த குலராஜசிங்கம் ஸ்ரீதரன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உடலத்தினை நெடுங்கேணி வைத்தியசாலை கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர், குடும்பஸ்தரின் சடலம் மேலதிக விசாரணைக்காக வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.