சீன ஜனாதிபதியின் குறிப்பை எட்டி பார்த்தாரா ட்ரம்ப்..! உண்மை இதுதான் - வெளியான காணொளி
சீனாவிற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட இந்த வார விஜயத்தின் போது பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளியில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் குறிப்பேட்டைப் ட்ரம்ப் ஒளிந்து பார்த்தாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ட்ரம்ப் - ஷி ஜின்பிங்
அந்த காணொளி வெளியாகிய நேரத்தில், ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் மூன்று நாள் உச்சிமாநாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சந்திப்பு, அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்த போர்நிலை, மேலும் உலகின் எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படக்கூடிய அபாயம் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்களின் பின்னணியில் நடைபெற்றது.

உலகளவில் கடத்தப்படும் எண்ணெயின் ஐந்தில் ஒரு பகுதியும், சீனாவின் மூல எண்ணெய் இறக்குமதியின் சுமார் பாதியும் இந்த நீரிணை வழியாகவே செல்கின்றன.
உலகின் இரண்டு பெரிய வல்லரசுகளுக்கிடையிலான நீடித்துவரும் பதற்றநிலையைக் கருத்தில் கொண்டு, ட்ரம்பின் சீனா பயணம் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மையமாகக் கொண்டிருந்தது.
காணொளிக் காட்சிகள்
இந்த குறிப்பேட்டு சம்பவம் இடம்பெற்ற காணொளி, வியாழக்கிழமை பீஜிங்கில் நடைபெற்ற அரச விருந்தின் போது பதிவு செய்யப்பட்டது.
[Trump Sneaks Through Xi Jinping's This scene occurred yesterday (May 14, 2026) at a dinner hosted by Trump during his visit to China.
— MOSCOW NEWS 🇷🇺 (@MOSCOW_EN) May 15, 2026
As Xi Jinping got up and left his seat, Trump reached for the notebook in front of him, glanced at it, and quickly closed it again.… pic.twitter.com/8p1D8BAXWV
அதில், ஷி ஜின்பிங் அங்கிருந்து சில நொடிகள் விலகியபோது, மேசையில் இருந்த ஒரு கோப்புறையை நோக்கி ட்ரம்ப் சாய்ந்து பார்ப்பது போன்ற காட்சி காணப்படுகிறது. இதையடுத்து, அவர் ஷியின் குறிப்புகளை “ஒளிந்து பார்த்தார்” என்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவின.
ஆனால், அந்த விருந்தின் கூடுதல் காணொளிக் காட்சிகள் பார்க்கும்போது, அந்த கோப்புறை உண்மையில் ட்ரம்புக்குச் சொந்தமானதென்பது தெரியவந்துள்ளது.
எனவே, வைரலாக பரவிய அந்த காட்சி சூழலிலிருந்து பிரித்தெடுத்து தவறாக விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri