''அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஓர் அறிவிக்கப்படாத பனிப்போர் உருவாகியிருக்கிறது''(Video)
உலகப்பரப்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஓர் அறிவிக்கப்படாத பனிப்போர் உருவாகியிருக்கிறது என அருட்தந்தை ஜெகத் ஹஸ்பிரடியார் தெரிவித்துள்ளார்.
எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்றைய அரசியல் சூழலில் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவினுடைய வகிபாகம் என்பது எவ்வாறுள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய காலகத்திடம் என்பது ஒரு தனித்துவமான புவிசார் அரசியலினுடைய காலகட்டம். கோவிட-19க்கு பிந்தைய காலகட்டத்தில் அது இன்னும் கூர்மையாகியுள்ளது.
உலகப்பரப்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஓர் அறிவிக்கப்படாத பனிப்போர் உருவாகியிருக்கிறது.
அத்துடன் சீனாவினுடைய சூப்பர் பவர் அம்பிசன், தானும் அமெரிக்கா போன்று ஒரு வல்லரசாக மாறவேண்டும் என்பது எனத் தெரிவித்துள்ளார்.