பதவி விலகல் முடிவை மாற்றிக்கொண்டாரா தவிசாளர்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தனது பதவி விலகல் தீர்மானத்தை மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.
அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சி காலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய தவிசாளர் பதவியை புளொட்டுக்கு வழங்கும் நோக்குடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தனது பதவியைக் கடந்த இரு தினங்களிற்கு முன்பாக ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் புளொட்டை சேர்ந்த தவிசாளர் இதுவரையில் பதவி விலகல் முடிவினை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ராஜினாமா செய்திருந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தனது முடிவினை மீளப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பாக அவர் கையெழுத்திட்டுள்ள கடிதத்தினை பிரதேசசபையின் செயலாளருக்கு இன்று அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
