சீன நிறுவனத்திடம் மண்டியிட்டதா இலங்கை? எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்?
சீன சேதன உர நிறுவனத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாவனைக்கு உதவாத சேதன உரத்தை விநியோகம் செய்ததாக சீன உர நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்திடமிருந்து சேதன உரத்தை இறக்குமதி செய்வதனை அரசாங்கம் ரத்து செய்தது.
இது தொடர்பில் சீன நிறுவனம் சிங்கப்பூர் தீர்ப்பாயமொன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், சீன நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது.
உரிய தரத்துடன் மீளவும் உரத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் உர நிறுவனத்திற்கு இந்த தொகை செலுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri