கருணா அழைத்துச் சென்று படுகொலை செய்தாரா? 39 வருடங்களுக்குப் பின் வெளிவரும் உண்மை
இலங்கையில் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின் பணிப்புரையின் பேரில் படுகொலை செய்யப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு முக்கிய காரணிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் மட்டக்களப்பு பிரதேசத்திற்குத் தலைமை தாங்கிய கருணாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யுமாறு சுபாஷ், தனது உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. எனினும், அந்தத் தாக்குதலை அவர்கள் மேற்கொள்ளவில்லை.
இதற்குப் பழிவாங்கும் வகையில், கிரான் சந்தியில் வைத்து புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவருடன் ஹொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு கருணா - சுபாஷ் ஆகியோர் அக்காலகட்டத்தில் எவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டனர் என்பது தொடர்பான பல்வேறு விடயங்களை “உண்மைகள்” நிகழ்ச்சி ஆராய்கிறது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening