சதி முயற்சியால் ஆட்சியை கைப்பற்றினாரா கோட்டாபய? (Video)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சித்தரிக்கும் வெட்கமற்ற செயற்பாடுகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரட்ன (Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.
அரச தலைவரது ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சஹ்ரான் ஹாசிமுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக தெரிவிக்கப்படுவதையும் முற்றாக நிராகரித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், அரச தலைவரை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியென சித்தரிப்பதற்கு எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
இத்தாக்குதல் மூலம் சதி முயற்சியை மேற்கொண்டு அரச தலைவர் ஆட்சியைக் கைப்பற்றினாரென்ற அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயல்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri