நாட்டை பிளவடையச் செய்யும் முயற்சி தீவிரம் பெற்றுள்ளது – விஜேவீரவின் புதல்வர்
நாட்டை பிளவடையச் செய்யும் முயற்சி தீவிரம் பெற்றுள்ளதாக ஜே.வி.பி. கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தைப் பயன்படுத்தி, ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையை இரண்டு துண்டுகளாகப் பிளக்கும் வேலைத்திட்டமே இந்தத் தருணத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தரப்புக்கள் சர்வதேச சமூகத்தினர் மற்றும் ஏனைய சில தரப்பினரின் தலையீட்டுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் தோற்கடிக்கப்பட்ட போதிலும், பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.
இந்த நாட்டை இரண்டாகப் பிளக்கும் வேலைத்திட்டம் நமக்குத் தெரியாமலேயே மறுபுறத்தால் அழகாக அரங்கேறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சில முக்கிய சொத்துக்கள் வழங்கப்படுவதன் மூலம் இதனை புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மாஃபியாக்கள் குறித்தும் கடுமையாக விமர்சன்களை வெளியிட்டுள்ளார்.
ஷ்யாவின் வரலாறு மற்றும் இலக்கியங்கள் குறித்துப் படித்த ஆட்சியாளர்களைக் கொண்ட இந்த அரசாங்கத்திற்கு, ரஷ்யா வழங்க முன்வந்த சலுகை விலை எரிபொருளை இன்னும் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக மிகவும் சாதகமான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், ரஷ்யாவிலிருந்து எரிபொருள் எடுத்தால் வாகனங்கள் ஓடாது என்றும், அதே எரிபொருளை இந்தியாவிலிருந்து கொண்டு வந்தால் வாகனங்கள் ஓடும் என்றும் கூறுகிறார்கள். இவையாவும் திட்டமிட்ட மாஃபியா வர்த்தக நடவடிக்கைகள் என தெரிவித்துள்ளார். இந்த முறைகேடுகளால் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். சமூகம் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதுடன், பொருளாதார நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தின் விளைவாக நாடு அராஜக நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இதனால் யாருக்கு லாபம் கிடைக்கப் போகிறது என்பதைச் சிந்தித்து, சமூகம் ஒன்றிணைய வேண்டும் எனவும் உவிந்து விஜேவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri