ரிஷி சுனக் ஊடாக பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழர்கள் கொடுக்கவுள்ள அழுத்தம்
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிப்பார்கள் என களனிப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்பத் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பிரித்தானியாவின் புதிய பிரதமரின் ஊடாக இலங்கையின் அதிகாரப் பகிர்வில் புலம்பெயர் தமிழ் மக்கள் விசேட செல்வாக்கை செலுத்த கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு யோசனைகள் நிறைவேற்றம்
பிரித்தானியா அதிக இலங்கை தமிழ் மக்கள் வாழும் ஒரு நாடாகும்.அந்த நாட்டின் ஊடாக இலங்கை தொடர்பில் பல்வேறு யோசனைகள் முன்வைத்து நிறைவேற்றப்படுவதனை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
அதற்கமைய இந்திய பூர்வீம் கொண்ட ஒருவர் பிரித்தானியாவில் பிரதமராகியிருப்பது இலங்கை அரசியல் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வாய்புகள் உள்ளது.
அவர் ஊடாக புலம் பெயர் இலங்கை தமிழ் அமைப்புகள் அழுத்தம் பிரயோகிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.