புலம்பெயர் மக்களின் முதலீடு கிழக்கு மாகாணத்திற்கு அவசியம்: கிழக்கு ஆளுநர் வலியுறுத்தல் (Photos)
புலம்பெயர்ந்து வாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கிழக்கில் முதலீடுகளை செய்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களைப்போன்று வளப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிழக்கில் அதிகளவான வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு தனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நேற்று(05.08.2023) மாலை நடைபெற்ற சுவிஸ் நாட்டை சேர்ந்த கல்லாறு சதீஸின் ‘பனியும் தண்டனையும்’நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், “மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வழிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். கல்வியை அவர்கள் பற்றுடன் முன்னெடுக்ககூடிய வகையில் அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புலம்பெயர் மக்களின் முதலீடு
இந்த கிழக்கு மாகாணம் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி. கடந்த 30வருடமாக இலங்கை அரசாங்கத்தினால் வளர்ச்சிப்பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு எனக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களுக்கு சமாந்தரமாக கொண்டுவரவேண்டிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் இங்கிருந்து புலம்பெயர்ந்துசென்றுள்ளவர்கள் மீண்டும் இங்குவருவதற்கு முன்னுதாரணமாக இங்கு வந்துள்ளார். புலம்பெயர்ந்துசென்றவர்கள் இங்கு முதலீடுகளை செய்து தொழில்துறையினையும் அபிவிருத்திகளையும் செய்யவேண்டும்.
இது உங்களின் பிரதேசம்,உங்களது நாடு. மீண்டும் கிழக்கு மாகாத்திற்கு வந்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களுக்கு சமாந்தரமாக கொண்டுவருவதற்கு அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என தெரிவித்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழா
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னிந்தியாவின் திரைப்பட தயாரிப்பாளரும் பதிப்பாளருமான மு.வேடியப்பன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம்,கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நவநீதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம்,பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் நூலாசிரியர் கௌரவிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானும் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வின்போது கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.













விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
